பேரணாம்பட்டு வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
பேரணாம்பட்டு வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம்  நடந்தது.

 

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடி தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேரணாம்பட்டு நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகளில் மறு வரையறை செய்து பட்டியல் வெளியிடப்பட்டது இதில் பல வார்டுகள்பிரிக்கப்பட்டன இதனால் வார்டு மறுவரையறை செய்ததில் குளறுபடிகள் உள்ளது என்று கடந்த மாதம் திமுக மற்றும் அதன் கட்சி சார்பில் சாலை மறியல் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒன்று ஒன்பதாவது வார்டு சார்பில் கடந்த வாரம் நகராட்சி அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனைத்தொடர்ந்து நேற்று பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் வார்டு மறுவரையறை செய்வதில் உள்ள குளறுபடிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் நடந்தது அப்போது 2018 19 குடியிருப்புகள் மற்றும் குடும்பங்கள் எண்ணிக்கை அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் வார்டு மறுவரையறை செய்து தயாரித்துள்ள பட்டியலை பேரணாம்பட்டு குடியாத்தம் நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன் வாசித்தார் அப்போது 8 9 10 2 3 20 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வார்டுகளை பிரிக்கக் கூடாது பழையபடியே இருக்க வேண்டும் என்றனர் இதனால் சிரி துநேரம் கூச்சல் குழப்பம் நிலவியது அப்போது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் விஜயகுமார் நகராட்சி ஆணையாளர்கள் ரமேஷ் (குடியாத்தம்) நித்தியானந்தம் (பேரணாம்பட்டு)  தாசில்தார் முருகன் உள்பட பலர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

" alt="" aria-hidden="true" />