விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எடையூர் கிராமம் மேட்டு தெருவில் வசிக்கும் கருப்புசாமி மனைவி நல்லம்மாள் என்பவர் அக்கிராமத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் தன்னுடைய நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தராக உள்ள பாலமுருகன் என்பவர் நல்லம்மாள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளைக் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக வசூல் செய்வது, ஒரு மூட்டை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் ரூபாய் 50 வீதம் ஒரு மூட்டைக்கு கையூட்டு கேட்பதாகவும் கையூட்டு தராத விவசாயிகளை அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், ஒரு மூட்டை எடை போடுவதற்கு 50 ரூபாய், தூக்குக் கூலி 50 ரூபாய் என விவசாயிகளிடமிருந்து வாங்கிக்கொண்டு முழு தொகையையும் அவரே எடுத்துக் கொள்கிறார் என்றும், கையூட்டு தரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கையூட்டு தர வசதியில்லாத விவசாயிகளை மிரட்டி துரத்தி வருவதாகவும், நாள்தோறும் எடையூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அவதியுற்று வருவதால் சார் ஆட்சியர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இன்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்டீபன் தலைமையில் எடையூர் நேரடி கொள்முதல் அதிகாரி பாலமுருகனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிறகு, சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதனிடம் மனு அளித்தனர்.

" alt="" aria-hidden="true" />