புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் அறந்தை ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வேகமாக பரவிவரும் கொரோனாவைரஸை தடுக்கும் விதமாக அறந்தை ரோட்டரிசங்கம் சார்பில் முககவசம் வழங்கபட்டது.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கபட்டது.
நிகழ்வில் அறந்தை ரோட்டரி சங்க தலைவர் தங்கதுரை,செயளாளர் பன்னீர்செல்வம்,
பொருளாலர் சரவணன் டெப்போமேலாளர் சுப்பிரமணி, பரிசோதகர் மூர்த்தி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் விஐயசுந்தர், செந்தில்குமார், சிவசுப்பிரமணி, மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.